ஆசிய மற்றும் பண்டைக்கால ஆராய்ச்சி நிறுவனம்
ஆராய்ச்சி நிறுவனத்தைப் பற்றி
உயர்நிலைப் பொருளாதாரக் கல்லூரியின் ஆசிய மற்றும் பண்டைக்கால ஆராய்ச்சி நிறுவனம் ஆசிய சம்பந்தப்பட்டவற்றை ஆராய்ச்சி செய்வதிலும், மாணவர்களுக்குக் கிழக்கு நாடுகள் சம்பந்தப்பட்ட ஆய்வுகளைச் செயல்படுத்துவதிலும் பண்டைக்கால மேற்கத்திய உலக வரலாற்றைப் பற்றிய ஆய்வுகளைச் செய்வதிலும் ஈடுபட்டுள்ளது. ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல்பாடு பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது:
ஓரியண்டல் ஸ்டடீஸ், கிளாசிக்கல் பிலாலஜி மற்றும் பண்டைய வரலாற்று வல்லுநர்கள் ஒருங்கிணைந்து பலதுறைகளிலும் (interdisciplinary) ஆய்வு செய்வது
ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலின் அனைத்து மட்டங்களிலும் பாரம்பரிய ஓரியண்டல் ஆய்வுகளுக்கும் தற்கால ஓரியண்டல் ஆய்வுகளுக்கும் இடையேயுள்ள நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்துவது
பிராந்தியங்கள், மொழிகள் மற்றும் மரபுகள் ரீதியாக பரந்த புவியியல் அடக்க எல்லையை நிறுவகிப்பது
ஆராய்ச்சியின் ஒரு பரந்த அளவிலான கருப்பொருள் வரம்புகள் (மொழியியல், கலாச்சார ஆய்வுகள் முதலியவை)
ஆராய்ச்சியையும் கல்வி செயல்முறையையும் ஒருங்கிணைத்தல்
ரஷ்ய மற்றும் சர்வதேச விஞ்ஞான மையங்களுடன் நெருக்கிய ஒத்துழைப்பு
நவீன பதிப்பக வெளியீட்டு நடைமுறைகள்
ஆய்வுத் துறைகள்
புவியல் ரீதியாகப் பார்த்தால், நிறுவன ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகள் ஓரியண்டல் மற்றும் கிளாசிக் படிப்புகளின் பாரம்பரிய பகுதிகளைப் பெரும்பாலாக உள்ளடக்கியதாக இருக்கும்:
சீனா, ஜப்பான், கொரியா, வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்து, மங்கோலியா மற்றும் திபெத், ஈரான், பண்டைய இந்தியா, முஸ்லீம் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான், திராவிட இந்தியா, துருக்கி மற்றும் மத்திய ஆசியாவின் துருக்கிய மொழி பேசும் நாடுகள், அரபு உலகம், எத்தியோப்பியா மற்றும் எரித்திரியா, பண்டைய மெசொப்பொத்தேமியா, பழைய ஏற்பாடும் அதன் உலகமும், கிறிஸ்தவ ஓரியண்ட், சிரியாக் மற்றும் நியோ அராமைன் ஆய்வுகள், பண்டைய கிரேக்கம் மற்றும் ரோம், பண்டைய கிழக்கு தொல்லியல், ரஷ்யாவின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகள் தொல்லியல்.
ஆராய்ச்சியின் கருப்பொருளைப் பொறுத்தவரை, பின்வரும் முக்கிய துறைகளைக் குறிப்பிடப்படலாம்:
- பழங்கால நூல்களின் பதிப்பக வெளியீடுகளும் பொருளுரையுடைய மொழிப்பெயர்ப்புகளும் ("ஓரியண்டல் மற்றும் க்ரேகோ-ரோமன் பழங்கால பாரம்பரிய நூல்கள்" என்னும் நீண்ட கால ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுத் திட்டம்)
- பண்டைய மற்றும் இடைக்கால ஓரியண்டல் இலக்கியங்களைப் பற்றிய ஆய்வு
- இடைக்கால ஓரியண்டல் இலக்கியக் கோட்பாடுகளைப் பற்றிய ஆராய்ச்சி (ஈரான், இந்தியா, சீனா மற்றும் ஜப்பான்)
- கிழக்கு மற்றும் மேற்கு கலாச்சாரங்களின் ஒப்பீட்டு ஆய்வுகள் (பழங்காலம் - மத்தியக்காலம் - நவீனத்துவம்)
- பண்டைய மற்றும் நவீன ஆசியா மற்றும் ஆபிரிக்க மொழிகளின் ஒத்திசைவு மற்றும் ஒப்பீட்டு-வரலாற்று விளக்கங்கள் (செமிடிக், இந்திய-ஐரோப்பிய, ஆல்டிக், இந்தோசீன மற்றும் சீன-திபெத்திய மொழிகள்)
- நாட்டுப்புறவியல் ஆய்வுகள், ஆசிய நாடுகளின் தொன்மவியல் மற்றும் பிரபல மதங்களில் ஆராய்ச்சி (களப்பணி, முடிவுகளின் வெளியீடும் பகுப்பாய்வும்)
- கிழக்கு மற்றும் ஹெலனிஸ்டிக் தொல்லியல்
வெளியீடுகள்
பின்வரும் நடவடிக்கைகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீட்டுத் திட்டங்கள்:
• பல தொகுதிகளை உள்ளடக்கிய Orientalia et Classica என்னும் நூல் தொடரை தொடர்ச்சியாக வெளியிடுவது
• அதே பெயரில் ஒரு சர்வதேச விஞ்ஞான இதழை வெளியிடுவது
• பிரசித்தி பெற்ற அறிஞர்களின் பங்களிப்புடன் வெளிநாட்டு பதிப்பகங்களில் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்புகளையும் தனி நூல்களையும் வெளியிடுவது.
சர்வதேச வெளியீட்டு நிறுவனமான Eisenbrauns - உடன் சேர்ந்து, Babel und Bibel என்னும் துணைத் தொடரை வெளியிடுவது; அது Web of Science மற்றும் Scopus ஆகியவற்றில் குறியிடப்பட்டுள்ளது. Gorgias Press என்ற பதிப்பகத்துடன் சர்வதேச ஆசிரியக் குழுவும் சேர்ந்து "மொழி பற்றிய தொடர்புகள்" என்னும் விஞ்ஞான இதழை வெளியிடுவது (கட்டுரைகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உள்ளன).
நிறுவனத் துறைகள்:
நிறுவனம் வழங்கும் பின்வரும் பகுதிகள்:
- பைபிள் மற்றும் பண்டைய இஸ்ரேல் வரலாறு
- இந்திய மொழிகளும் இலக்கியமும்
- ஈரானின் மொழியும் இலக்கியமும்
- சீன மொழியும் இலக்கியமும்
- இந்தோ-சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய மொழிகளும் இலக்கியங்களும்
- ஜப்பான் மொழியும் இலக்கியமும்
- கொரிய மொழியும் இலக்கியமும்
- பழங்கால மெசொப்பொத்தேமிய மொழிகளும் இலக்கியமும்
- பண்டைய சிரியா மற்றும் பாலஸ்தீன மொழிகளும் இலக்கியங்களும்
- எத்தியோப்பிய-அரபு பிலாலஜி
- அரபு நாட்டு மொழிகளும் இலக்கியங்களும்
- இந்திய மொழிகளும் இலக்கியங்களும் (தமிழ் மற்றும் சமஸ்கிருதம்)
- இந்தியா மற்றும் முஸ்லீம் தென் ஆசிய மொழிகளும் இலக்கியங்களும் (உருது மற்றும் பாரசீகம்)
- மங்கோலிய மற்றும் திபெத் மொழிகளும் இலக்கியங்களும்
- துருக்கி மொழியும் இலக்கியங்களும்
- பண்டைய கிரீஸ் மற்றும் ரோமானிய வரலாறு
- கிளாசிக்கல் பிலாலஜி
நிறுவனத்தில் கற்பிக்கப்படும் மற்றும் ஆய்வு செய்யப்படும் மொழிகள்:
சுமேரியன், அக்காடியன், உகாரிட்க், ஃபொனீசியன், ஹீப்ரு, பண்டெய அரமிய மொழிகள், சிரியாக், தற்கால அரமிய மொழிகள் (துரோயோ உட்பட), ஹுர்ரியன், ஹிட்டெட், கிளாசிக்கல் எத்தியோபிக் (கியஸ்), இலக்கிய அரபு மற்றும் அதன் வட்டாரப் பேச்சுவழக்குகள், அம்ஹரிக், டிக்ரின்யா, ஸொக்கோத்திரன், சமஸ்கிருதம், இந்தி, பாளி, பிராகிருதம், லடாக், தமிழ், நவீன பாரசீகம், கிளாசிக்கல் பாரசீகம், உருது, சீனம், பண்டைய சீனம் (wenyan) , ஜப்பானிய மொழி, பண்டெய ஜப்பானிய மொழி (Bunge), கொரிய மொழி, வியட்நாமிய மொழி, தாய்லாந்து மொழி, லாவோ, கெமெர், மங்கோலியன், திபெத்திய மொழி, ஷகதை, பழைய துருக்கிய மொழி, பழைய ஓட்டோமான், துருக்கிய மொழி, கிரேக்கம், லத்தீன், அனடோலியன், ஆல்டிக் மொழிகள், துகாரியன் மொழி, கெளகேசிய, சீன-திபெத்திய, ஆஸ்ட்ரோ-ஆசியடிக், திராவிட மொழிகள், சுக்கோட்க, காம்சத்க, இயேனிசெய், கோஸியன்.
நிறுவனத்தின் ஆராய்ச்சி இலக்குகளில் மிகவும் முக்கிய கருப்பொருட்கள்:
- பண்டைய கிழக்கு நாடுகள், அரேமியம், ஒப்பீட்டு செமிட்டாலஜி, அரேபியாவின் தெற்கின் மனிதவியல் மற்றும் நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி
- ஒப்பீட்டு-வரலாற்று மொழியியல், தொலைதூர மொழியியல் உறவு ஆராய்ச்சி, மொழிகளின் மரபார்ந்த வகைப்படுத்தலின் அளவு முறை
- கிளாசிக்கல் பிலாலஜி மற்றும் கிரேக்க-ரோமன் பழங்கால வரலாறு: மொழிகள், இலக்கியம், தொன்மவியல், ராஜ்யங்கள் மற்றும் மக்களின் வரலாறு
- ஹெலனிசம் கால மத்திய கிழக்கு, சிரிய - பாலஸ்தீனிய பிராந்திய இடைக்கால வரலாறும் கலாச்சாரமும் மதமும்
- இந்திய, ஈரான், மங்கோலிய மற்றும் திபெத் இலக்கியப் பாரம்பரியம்: பௌத்த பிலாலஜி, பாரசீக மொழியும் இலக்கியமும், மங்கோலிய சரித்திரக் கதைகள், இலக்கிய வகை தொடர்பான பிரச்சினைகள்
- கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா: வரலாறும் கலாச்சாரமும் - மொழிகள், இலக்கியம், தொன்மவியல் மற்றும் நாட்டுப்புறவியல் - சீனா, ஜப்பான், கொரியா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் மற்றும் தாய்லாந்து
- பலதுறை ஆராய்ச்சி சூழலில் கலாச்சாரங்களைப் பற்றிய ஒப்பீட்டு ஆய்வு.
Нашли опечатку?
Выделите её, нажмите Ctrl+Enter и отправьте нам уведомление. Спасибо за участие!
Сервис предназначен только для отправки сообщений об орфографических и пунктуационных ошибках.